Monday, August 3, 2015

காகித பை

ஆச்சர்யமாக இருந்தது 
அந்த அனாதை சிறுமி 
என்னிடம் பிச்சை கேட்கவில்லை.

கையில் வைத்திருந்த
காகித பையை கேட்டாள்...

ஐநூறு ரூபாய் உணவிற்கு  
முன்னூறு ரூபாய் வரி  கொடுத்ததற்கு 
உணவு எடுத்து செல்ல 
என்னக்கு கொடுத்த பை .

அதில் உணவு இல்லை என்றேன்.

பை மட்டும் கொடுங்கள் என்றாள்.

எதற்க்கு கேட்கிறாள் 
என்ற குழப்பம் எனக்கு.

கனவுகள் சேகரிக்கவா 
இல்லை பிச்சை காசு 
போட்டு வைக்கவா.

எதுவாயினும் இரண்டு நாட்களுக்குள் 
கிழிந்துவிடும் அந்த பையை 
ஏன் கேட்கிறாள் .

இருப்பினும் பணம் கேட்டால் 
இல்லை என்றிருக்கலாம் 
உணவு கேட்டல் மறுத்திருக்கலாம் 
பை தானே  தருவதில் 
என்ன தவறு என்று 
தந்துவிட்டேன்.

அதற்க்கு முன் உள்ளிருந்த 
கண்கவர் உணவு பெட்டியை
எடுத்து வைத்துவிட்டு தான்.

பையை கொடுத்தவுடன்  
அவள் அடைந்த சந்தோஷத்தில் 
அவளுக்கு வேண்டியது அந்த பை 
மட்டும் தான் என்பதை உணர்ந்தேன்.

என்னதான் செய்வாள் 
அந்த பையை கொண்டு?

எட்டி பார்த்தேன்,
அந்த உணவு விடுதியின் 
பின்புறம் உள்ள குப்பை 
தொட்டியில் இருந்து 
சரியாக தின்ன படாத 
சிக்கன் துண்டுகளை 
சேகரித்து, அங்கயே 
கிடந்த ஒரு 
கண்கவர் பெட்டியில் போட்டு 
எடுத்து சென்றாள்.

திரும்பி என் பெட்டியை 
பார்த்தேன்.

தரம் கெட்ட மனிதனாய் 
தனித்து நின்றேன்.

இறைவனிடம் முன்னுரிமை

வருடகணக்கில் 
வாசலில் இருக்கும் 
பிச்சைகாரர்களுக்கே 
வழி காட்ட முடியாத 
இறைவனிடம் 
அவ்வப்போது 
வந்து போகின்ற 
எனக்கு என்ன வழி 
காட்ட சொல்லி கேட்பது?

Monday, July 8, 2013

உடல். மொழி. காதல்.

அதென்ன 
அப்படி 
ஒரு பார்வை 
சம்மட்டியால் 
சட்டென்று 
அறைந்தது  போல 

அதென்ன 
அப்படி 
ஒரு கோபம் 
பசித்தவன் 
கையிலிருந்து சோற்றை 
பறித்தது போல 

அதென்ன 
அப்படி 
ஒரு தவிப்பு
தப்பிக்க 
வழி இல்லா 
பறவை போல

அதென்ன 
அப்படி 
ஒரு அழுகை  
வாழ்வின் மொத்த 
சோகம் 
சேர்ந்தது போல 

அதென்ன 
அப்படி 
ஒரு வெறுப்பு 
தெரியாமல் 
சேற்றில் கால் 
வைத்தது போல 

நான் பார்க்க 
நீ பார்க்க 
நமக்குள் 
இருக்குமோ 
ஒரு 
இம்சையான 
உறவு 
என்று 
நான் வந்து 
காதல் சொல்ல 

அதென்ன 
அப்படி ஒரு 
அடி 
இனி என்னை 
தவிர யாருக்கும் 
இதை சொல்லாதே 
என்பது போல

Friday, October 7, 2011

தனிமை!

மரண பயம்
என்பது
முதுமையில்
தனிமையோ?

Monday, October 3, 2011

பிச்சைக்காரன்!

நான் புண்ணியம் பெற
காசுக்காக கெஞ்சுகிறான்
உச்சி வெயிலில் பிச்சைக்காரன்!

வாச்சாத்தி!

அப்பாவிகள்
தண்டிக்கப்பட கூடாதென்று
உருவாக்கப்பட்ட சட்டத்தில்
உள்ள ஓட்டைகளால்
தினம் தினம் தண்டிக்கபடுகிறார்கள்
அப்பாவிகள்!